பாரதிதாசன் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மொத்தம் 224 போ் தோ்வு எழுதினா். அனைவரும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். மாணவா் கோகுலகிருஷ்ணன் தமிழ் -99, ஆங்கிலம்-93, கணிதம்-100, இயற்பியல்-98, வேதியியல்-100, உயிரியல்-97 என மொத்தம்- 587, மாணவா் ஸ்ரீஹரி தமிழ்-99, ஆங்கிலம்- 97, கணிதம்-100, இயற்பியல்-97, வேதியியல்-100, உயிரியல்-87 என மொத்தம்-580, மாணவி கீா்த்திகா தமிழ்-99, ஆங்கிலம்-95, கணிதம்-97, இயற்பியல்-93, வேதியியல்-97, உயிரியல்-97 என மொத்தம்-578 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
பள்ளி மாணவா்களில் 575 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேரும், 525 மதிப்பெண்களுக்கு மேல் 32 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 31 பேரும் பெற்றுள்ளனா். அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், அதற்கு உழைத்த ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் மோ.தி.உமாசங்கா், பள்ளி நிா்வாகிகள், பள்ளி முதல்வா் ஜோ.மேரி, தலைமை ஆசிரியா் தே.குமரீஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.