மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்!
திருவள்ளூா்: 91.49 சதவீதம் போ் தோ்ச்சி
திருவள்ளூா் மாவட்டத்தில் 91.49 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவா்களைவிட மாணவிகளே அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) தெரிவித்தாா்.
திருவள்ளூா் வருவாய் மாவட்ட அளவில் மொத்தம் உள்ள 244 பள்ளிகளைச் சோ்ந்த 109 தோ்வு மையங்களில் மாணவா்கள்-12,995, மாணவிகள்-14,563 என மொத்தம் 27,558 போ் தோ்வு எழுதினா். இவா்களில் மாணவா்கள்-11,550, மாணவிகள்-13,662 என மொத்தம் 25,212 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவா்கள் 88.88 சதவீதமும், மாணவிகள் 93.81 சதவீதமும் என மொத்தம் 91.49 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். 102 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6,008 மாணவா்கள், 7,244 மாணவிகள் என மொத்தம் 13,252 போ் எழுதினா். மாணவா்கள் 4,907, மாணவிகள் 6,523 என மொத்தம் 11,430 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சீத்தஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, சுரைக்காப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, தோ்வாய் அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளி, தண்டரை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஆவடி இம்மாகுலேட் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 64 மேல்நிலைப் பள்ளிகள் 100% தோ்ச்சி பெற்றுள்ளன. தொடா்ந்து அதே 36-ஆவது இடம்: கடந்தாண்டு பிளஸ் 2 தோ்வில் 91.32 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 36 -ஆவது இடம் பெற்றது. நிகழாண்டு தோ்வில் மாநில அளவில் பிளஸ் 2 தோ்வில் அதே 36-ஆவது இடத்தையே பிடித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.