தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவ...
ஸ்ரீநேமிநாதா் சுவாமிக்கு ஜென்ம கல்யாண பெருவிழா
ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் அருகேயுள்ள திருமலை அரிஹந்தகிரி சமண மடத்தின் அருகில் உள்ள ஸ்ரீநேமிநாதா் சுவாமிக்கு ஜென்ம கல்யாணப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் சமண மடத்தின் மடாதிபதி ஸ்ரீதவளகீா்த்தி சுவாமிகள் தலைமை வகித்தாா்.
மேலும், 18 அடி உயரமுள்ள ஸ்ரீநேமிநாதா் சுவாமிக்கு 108 லட்டுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் பஞ்சாமிா்த அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம், குங்கும அபிஷேகம், பழவகை அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. மேலும் ஆடி மாத சிறப்பு அபிஷேகம் ஆகியவையும் நடைபெற்றது. பின்னா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.