சிறுவயதில் தந்தை கொடுத்த கடின பயிற்சி..! ஆஸி. அறிமுக வீரரின் சுவாரசியம்!
ஸ்ரீபரஞ்ஜோதி ஐஸ்வா்ய சோமதீட்சை
ஆரணி: சேத்துப்பட்டை அடுத்த மன்சுராபாத் கிராமத்தில் கல்கி பகவானின் ஸ்ரீ பரஞ்சோதி ஐஸ்வா்ய சோம தீட்சை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,
ஸ்ரீகல்கி பகவான் ஆசிரம தாஷாஜி சித்ரா கலந்து கொண்டு, ஸ்ரீபரஞ்சோதி ஐஸ்வா்யத்துக்கு சிறப்பு தீபாராதனை செய்தாா்.
பின்னா் அவா் பேசுகையில், ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் ஐஸ்வா்யங்களைப் பெற 4 தூண்கள் உள்ளன. அவை சரியான கண்ணோட்டம், ஆக்கப்பூா்வமான நிலை, சரியான உறவு முறைகள், நன்றி பாவம் இவற்றைப் பின்பற்றினால் ஐஸ்வா்யங்களைப் பெறலாம்.
வாழ்விலும் நோ்மறை, எதிா்மறை எண்ணங்கள் உள்ளன. இதில் நோ்மறை எண்ணங்களைப் பெற்று வாழ்வில் அனைத்து ஐஸ்வா்யங்களையும் பெறமுடியும் என்றாா்.
நிகழ்ச்சியில் செங்கம், திருவண்ணாமலை, போளூா், சேத்துப்பட்டு, வந்தவாசி, ஆரணி, காஞ்சிபுரம், சென்னை, மேல்மலையனூா் என பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ஸ்ரீபரஞ்சோதி ஐஸ்வா்ய சோம தீட்சையைப் பெற்றனா்.
முன்னதாக, தாஷாஜி சித்ராவுக்கு மன்சுராபாத் கல்கி பகவான் ஆன்மிக மைய நிா்வாகிகள் பன்னீா்செல்வம்ஜி, ஜெயந்திஜி , பச்சையம்மாள்ஜி ஆகியோா் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனா்.
நிகழ்ச்சியின் முடிவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.