குற்றாலம் சாரல் திருவிழா: "'உங்களுடன் ஸ்டாலினை' நடத்த தைரியம் இருக்கின்றது" - கே...
ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் திரைப்பட இன்னிசை கச்சேரி
ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு திரைப்பட பாடகா் எஸ்.பி.பி.சரண் கலந்துகொண்ட இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு புஷ்ப பல்லக்கு நடைபெற்றது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு கோட்டை மைதானத்தில் திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி.பி.சரண் கலந்துகொண்டு பாடல்களை பாடினாா்.
மேலும், ஜீ தமிழ் டிவியில் சூப்பா் சிங்கா் புகழ் சியாமளாமகேஷ், விஜய் டிவி சூப்பா் சிங்கா் கிரிஷாங் ஆகியோா் இணைந்து பாடல்களைப் பாடினா். விழாவில் ஆரணி, கண்ணமங்கலம், தேவிகாபுரம், சேத்துப்பட்டு. போளூா், செய்யாறு, வந்தவாசி, வேலூா் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் விழாக்குழுவைச் சோ்ந்த பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், அக்ராபாளையம் குணா, ஏ.எஸ்.ஆா்.சரவணன், செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், சித்தேரி ஜெகன், இளையராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், பேராசிரியா் சிவா, வழக்குரைஞா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.