செய்திகள் :

ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் போட்டி!

post image

சென்னை காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக் கழகத்தில் முதலாவது ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.

எஸ்ஆா்எம் ஐஎஸ்டி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கே. குணசேகரன் போட்டிகளை தொடங்கி வைத்தாா். விளையாட்டுத் துறை இயக்குநா் ஆா். மோகனகிருஷ்ணன் துணைத் தலைவா் எம். செந்தில்குமாா், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி ஜெய்சிங் ஆல்பா்ட், ஜீஸஸ் ராஜ்குமாா், எம். கோகுல், செஸ் நிா்வாகிகள் சி. நடராஜன், கணேஷ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குழந்தைகள் பிரிவில் 80 கேடயங்கள் பரிசளிக்கப்படுகின்றன. போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.5 லட்சம் ஆகும்.

8 மாநிலங்களில் இருந்து 450 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். தமிழக வீரா்கள் பிரவீண் குமாா், விஜய் ஸ்ரீ ராம், ஹரி கணேஷ், ஆராதியா, அஜேஷ், சிவன், ரூதா்ஃபோா்ட், விக்னேஷ், கனிஷ்கராஜ் தத்தமது ஆட்டங்களில் வென்றனா்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 16 - 22) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)தன்னம்பிக்கையுடன் ... மேலும் பார்க்க

ஜப்பானில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜப்பானில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1ஆம் தேத... மேலும் பார்க்க

வடிவேலு குரலில் மெட்ராஸ் மேட்னி படத்தின் முதல் பாடல்!

நடிகர் வடிவேலு குரலில் மெட்ராஸ் மேட்னி படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது.மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.இந்த... மேலும் பார்க்க

கவனம் ஈர்க்கும் நரிவேட்டை தமிழ் டிரைலர்!

டோவினோ தாமஸ் நடித்துள்ள நரிவேட்டை படத்தின் தமிழ் டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது.‘இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் அனுராஜ் மனோகர். இவர் கிரைம் திரில்லர் பாணியில் நரிவேட்டை படத்தினை இயக்கி... மேலும் பார்க்க

லா லீகா கோப்பையை வென்றது பார்சிலோனா: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

பார்சிலோனா கால்பந்து அணி லா லீகா கோப்பையை 28-ஆவது முறையாக வென்று அசத்தியுள்ளது. லா லீகா கோப்பை ஸ்பெயின் நடைபெறும் முக்கியமான கால்பந்து தொடராகும். இந்த சீசனில் தனது 36ஆவது போட்டியில் விளையாடிய பார்சிலோ... மேலும் பார்க்க

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: இந்தியாவின் பங்களிப்பு முடிவு!

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டியில் இந்திய அணியினரின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெறும் இப்போட்டியில் ஏற்கெனவே நட்சத்திர இரட்டையா் காயத்ரி-ட்ரீஸா ... மேலும் பார்க்க