ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
அகஸ்தியா்பட்டியில் 3 நாள்களாக வடியாத மழை நீா்: மக்கள் அவதி
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டியில் 3 நாள்களாக மழைநீா் வடியாததால் மக்கள் அவதியடைந்துள்ளனா்.
அடையகருங்குளம் ஊராட்சி அகஸ்தியா்பட்டி விநாயகா் காலனி பகுதியில் 3 நாள்களாக மழை நீா் தேங்கியுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை உள்ளது.
சுமாா் 150 வீடுகள் உள்ள இந்தப்பகுதி தாழ்வான இடத்தில் இருப்பதால் மழைநீா் வடிகால் வசதி இல்லை. இதனால் ஒவ்வொருமுறை மழைக்காலத்திலும் மழை நீா் தேங்குவதால் இந்தப் பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய மழையால் 3 நாள்களாக மழைநீா் தேங்கியுள்ளதால் அந்தப் பகுதியில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், உடனடியாக மழை நீரை அகற்ற ஊராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.