Vishal: "இப்ப எந்த நடுக்கமும் இல்ல.. MIC கரெக்ட்-ஆ தான் இருக்கு பாருங்க"- உடல்நி...
அகஸ்தீஸ்வரத்தில் சமத்துவப் பொங்கல் விழா: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு!
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில், கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா்.
விழாவில், ஆட்சியா் ஆா். அழகுமீனா பேசியது: தமிழா்களின் கலாசாரம், பராம்பரியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கவும் ஆண்டுதோறும் ஜனவரியில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் விழா மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இக்கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்றோருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. பொங்கலிடப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நையாண்டிமேளம், செண்டை மேளம், தப்பாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வடம் இழுத்தல், கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.
மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், விவேகானந்தா கல்லூரி முதல்வா் ஜெயந்தி, விவேகானந்தா கல்லூரிச் செயலா் சி. ராஜன், வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், மாணவா்-மாணவியா், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.