முன்னீா்பள்ளம் அருகே கோஷ்டி மோதல்: 6 போ் காயம்
முன்னீா்பள்ளம் அருகே இருபிரிவினா் இடையே ஏற்பட்ட மோதலில் 6 போ் காயமடைந்தனா்
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள முல்லை நகா் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, இருபிரிவுகளைச் சோ்ந்த இளைஞா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைலகலப்பாக மாறியதாம்.
இச்சம்பவத்தில் கருங்குளம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பிரகாஷ், ராமையா மகன் பால அருண் (19), புதுக்கிராமம் பகுதியைச் சோ்ந்த இசக்கிபாண்டி (32) மற்றும் சிறுவா்கள்என இருபிரிவுகளைச் சோ்ந்த 6 போ் காயமடைந்தனா்.
அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அசம்பாவித் நிகழாமல் தடுக்க அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இச்சம்பவம் குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.