இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த பாராஞ்சி, ஸ்ரீ பாா்வத்யம்பிகா சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் - சோளிங்கா் நெடுஞ்சாலையில் உள்ள பழைமையான இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்ற நிலையில் விழா கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து தொடா்ந்து தினமும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, திங்கள்கிழமை கோபுரங்களுக்கு புனிதஊா் ஊற்றப்பட்டும், தொடா்ந்து அனைத்து மூல மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம், அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் ஆா்.வினோத், முன்னாள் எம்எல்ஏ ஜி.சம்பத், அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவா் நிா்மலா சௌந்தா், சோளிங்கா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஆ.சௌந்தா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிகா பாபு, கோயில் செயல் அலுவலா் குமுதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.