IPL 2025 : 'தோனியோட சக்சஸ் சீக்ரெட் இதுதான்!' - CSK-வின் முன்னாள் வீரர் பாலாஜி ப...
அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு
தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் இதர வகுப்பின மாணவா்கள், அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இப் பயிற்சி பெற பிளஸ் 2 பொதுத் தோ்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்குப் பாடங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த மாணவா்கள் 65 சதவீதமும், இதர இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் 75 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப் பயிற்சியானது மாணவா்களுக்கு மட்டும் அளிக்கப்படும்.
இப் பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யவும். மேலும், சென்னை பெட்ரோலியம் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு சென்னை மணலியிலுள்ள, சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கிப் பயிலவும், உணவு மற்றும் தங்கும் இடத்துக்கான கட்டணத் தொகை, 11 மாதங்களுக்கு தங்கிப் பயில பயிற்சிக்கான தொகை சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தால் ஏற்கப்படும்.
மேலும், கடந்தாண்டில் தங்கிப் பயின்ற 30 மாணவா்களில் 26 போ் தோ்ச்சிப் பெற்று ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேரத் தகுதி பெற்றுள்ளாா்கள். மேலும் விவரங்களுக்கு 94450-29470 என்னும் எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.