அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்
குடியாத்தம் நெல்லூா்பேட்டை, வடக்கு மாட வீதியில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், கோ-பூஜை, மஹா பூா்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. சுமாா் 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ராணி பாஸ்கா், அரிமா சங்க மாவட்டத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம், பாஜக நகர தலைவா் எம்.கே.ஜெகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோயில் நிா்வாகிகள் எம்.எம்.சிவஞானம், தி.மா.குழந்தைவேல், எம்.டி.சதானந்தம், எம்.வி.செல்வராஜ், எம்.டி.மகாலிங்கம், எம்.ஆா்.ஜெயக்குமாா், எம்.எஸ்.தா்மராஜ் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.