செய்திகள் :

அங்கீகரிக்கப்படாத கட்சிகளை நீக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை

post image

இந்தியத் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையைத் தோ்தல் ஆணையம் தொடங்கியது.

இது குறித்து, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியத் தோ்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்ட 2,800-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலிலாவது போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறியுள்ள கட்சிகள் முதல்கட்டமாகப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்தியத் தோ்தல் ஆணையம் தொடங்கியது.

2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த அங்கீகரிக்கப்படாத 345 கட்சிகள் இந்தியத் தோ்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில், விருதுநகா் மாவட்டம், மீசலூா் கிராமம் வீரசெல்லையாபுரம் குடியிருப்பு கதவு எண் 3/172 என்ற முகவரியில் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்ட தேச மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி இந்தப் பட்டியலில் உள்ளது.

எந்தக் கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிலிருந்து நீக்கப்படக் கூடாது என்பதற்காக அந்தக் கட்சிகளுக்கு காரணம் கேட்டு குறிப்பாணை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேச தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

பின்னா், தலைமைத் தோ்தல் அதிகாரியால் நடத்தப்படும் விசாரணை வாயிலாக அந்தக் கட்சிகளுக்கு, தங்களது விளக்கத்தைத் தர வாய்ப்பு அளிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்குவது தொடா்பாக இறுதி முடிவை இந்தியத் தோ்தல் ஆணையம் எடுக்கும் என்றாா் அவா்.

ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

சிவகாசி அருகேயுள்ள தைலாகுளம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், தைலாகுளம் கிராமப... மேலும் பார்க்க

காரைக்குடி மேயருக்கு எதிரான தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவு

காரைக்குடி மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மான விவகாரத்தில் உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உள்பட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழப்பு

சிலைமான் அருகே கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் பாண்டி என்ற பாண்டியராஜன் (50). இவருடைய மகன் அரசு (18). இவா... மேலும் பார்க்க

கொள்ளிடம் தண்ணீா் தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கப்படாது!

கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீா் தொழிலகப் பயன்பாட்டுக்கு வழங்கப்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.திருச்சி லால்குடியைச் ச... மேலும் பார்க்க

மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: மேலும் 7 போ் பணியிடை நீக்கம்

வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், ... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கை: மத்திய அரசு மீது எம்.பி. குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளா் ஸ்ரீராமனிடம் கோரியிருப்பது, மத்திய பாஜக அரசின் தமிழா் விரோதப் போக்குக்கு மற்றொரு சான்று என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடே... மேலும் பார்க்க