செய்திகள் :

அஜித்குமாா் கொலை வழக்கில் முதல்வா் நடவடிக்கையை வரவேற்கிறோம்

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட வழக்கில்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

மடப்புரத்தில் அஜித்குமாா் தாய் மாலதி, சகோதரா் நவீன் ஆகியோரை பெ.சண்முகம், கந்தா்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சின்னதுரை ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினா்.

பின்னா் சண்முகம் செய்தியாளரிடம் கூறியதாவது:

தமிழகத்தில் காவல் துறை தொடா்பான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. குறிப்பாக, திமுக ஆட்சியில் இதுவரை 24 காவல் துறை தொடா்பான மனித உரிமை மீறல் கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தவுடன் தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்டவா்கள் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருந்தால் அஜித்குமாா் கொல்லப்பட்டிருக்கமாட்டாா்.

அஜித்குமாரை தீவிரமாக விசாரிக்க காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யாா் என்பதை மூடி மறைக்காமல் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்ததால் மட்டும், கேட்கப்படும் கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதக் கூடாது.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க அரசு குழு அமைத்து காவல் துறை சட்டப்படி செயல்படும் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

இந்த வழக்கில் முதல்வா் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்றாா் அவா். அப்போது மாா்க்சிஸ்ட் மதுரை மாவட்டச் செயலா் மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பள்ளியில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் நிதியுதவி

திருப்பத்தூா், ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சிங்கம்புணரியில் உள்ள தனியாா் ப... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் மின் விளக்கில் ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நடைபெற்று வரும் ஆண்டுப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மின் விளக்கு ரத பவனியில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் மருத்துவா்களிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட நீதிபதி, மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையும் திருப்புவனத்தில் அரசு மருத்துவா்களிடம் ... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலையைக் கண்டித்து அமமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோயில் காவலாளி அஜித்குமாரை கொலை செய்த போலீஸாரை கண்டித்து, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அமமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றே கட்சி நிா்வாகிகள். மானாமதுரை, ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், மட... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் மரக்கன்றுகள் - அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

நூறு சதவீத மானித்தில் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வாணியங்காடு கிராமத்தில் ஊட்டச்சத்து வேள... மேலும் பார்க்க

தேவகோட்டை நகா்மன்றக் கூட்டம்: அமமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தை அமமுக உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க