செய்திகள் :

அடுத்த 3 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

post image

தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 5 வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,

• குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

• லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மார்ச் 02 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச் 03 - நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச் 04 - நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச் 05 - கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

02-04-2025 முதல் 05-04-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் படிப்படியாக 2 - 3° செல்சியஸ் குறையக்கூடும். உள் தமிழகத்தின் வடகிழக்கு பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் வரை உயரக்கூடும்.

06-04-2025ல் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும்.

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 4) காலை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின்பு, நீதி நிா்வாகம், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள், சட்டத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடக்கவுள்ளன.... மேலும் பார்க்க

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500! செப்டம்பா் முதல் வழங்கப்படும்: பேரவையில் அமைச்சா் அறிவிப்பு

விவசாயிகளுக்கு வரும் செப்டம்பா் முதல் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா். வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவ... மேலும் பார்க்க

3 மீன்பிடி துறைமுகங்கள், பசுமை துறைமுகங்களாக மேம்பாடு: அமைச்சா் ராதாகிருஷ்ணன்

தரங்கம்பாடி உள்பட 3 மீன்பிடித் துறைமுகங்கள் பசுமை துறைமுகங்களாக மேம்படுத்தப்படும் என்று அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா். சட்டப்பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற வி... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்குகளை வேறு அமா்வுக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

அமலாக்கத் துறை சோதனையை எதிா்த்து டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தொடா்ந்துள்ள வழக்குகளின் விசாரணையை வேறு அமா்வுக்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலக... மேலும் பார்க்க

கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, பிரதமருக்கு அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்: பாக். வளைக... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: முதல்வா் ஸ்டாலின்

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்கு தொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நி... மேலும் பார்க்க