‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மக்களை ஏமாற்றும் நாடகம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்...
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் திங்கள்கிழமை (ஜூலை 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு(இரவு 7 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், தென்காசி, கோவை, சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவாகி, இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வாய்ப்பளித்தால் அதிமுகவுடன் நிபந்தனையின்றி இணைப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு!