செய்திகள் :

அட்டாரி - வாகா எல்லை மூடல்: இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் உறவுகள்!

post image

அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டுள்ளதினால் இரு நாடுகளிலும் சிக்கியுள்ள ஏராளமான மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகிர்ந்து வந்த அட்டாரி - வாகா எல்லையை மூட நேற்று (ஏப்.24) இரு நாடுகளின் அரசுகளும் திடீரென உத்தரவிட்டதினால், எல்லையைக் கடக்க முடியாமல் ஏராளமான மக்கள் தவித்து வருகின்றனர்.

இத்துடன், பாகிஸ்தானிலுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப அறிவுறுத்தப்பட்டதுடன், இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதித்து மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. இதனால், தற்போது வரை இந்தியாவிலிருந்த 28-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களும், அந்நாட்டிலிருந்த 105-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் தங்களது தாயகங்களுக்கு திரும்பியுள்ளனர்.

சிக்கித் தவிக்கும் உறவுகள்...

இந்நிலையில், பல்வேறு காரணங்களினால் இந்தியா வரவிருந்த பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தான் செல்லவிருந்த இந்தியர்களும் எல்லையைக் கடக்க முடியாத சூழலில் தவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த அக்‌ஷய் குமார் என்பவரின் குடும்பத்தினர் மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் தங்களது உறவினரின் திருமணத்திற்காக அட்டாரி - வாகா எல்லையின் வழியாக இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, அவர்கள் நேற்று அட்டாரி - வாகா எல்லைக்கு வந்தபோது எல்லை மூடப்பட்டுள்ளதை அறிந்துள்ளனர். இதனால், லாஹூர் நகரத்தில் இரவைக் கழித்துவிட்டு இன்று தங்களது வீடுகளுக்குத் திரும்பவுள்ளதாக அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இந்தியாவைச் சேர்ந்த ரமிந்தர் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு தங்களது உறவினரின் திருமணத்திற்காகச் சென்றிருந்த நிலையில் எல்லைகள் மூடப்பட்டுள்ளதை அறிந்து நிகழ்ச்சி மற்றும் முக்கிய சடங்குகள் முடிவதற்குள் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இவர்களைப் போல், எல்லைகளைக் கடந்து இருநாடுகளிலும் உறவினர்களைக் கொண்டுள்ள ஏராளமான மக்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் நிலவும் போர்ப் பதற்றத்தினால் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையில் எப்போதெல்லாம் பதற்றமான சூழல் நிலவுகிறதோ, அப்போதெல்லாம் மனித தொடர்புகள்தான் முதலில் பாதிக்கப்படுவதாகவும், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டதன் மூலம் ஏராளமான குடும்பத்தினர் தங்களது உறவுகளைப் பிரியும் சூழல் உருவாகியுள்ளதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஆசிஃப் மெமூத் குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்

பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிர... மேலும் பார்க்க

அட்டாரி-வாகா எல்லை வழியாக நாடு திரும்பிய 191 பாகிஸ்தானியர்கள்

பஞ்சாபின் அட்டாரி-வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை 191 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 1000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு!

சிக்கிமின் லாச்செங் மற்றும் லாச்சுங் பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி சிக்கித் தவித்து வருவதாகவும், முதற்கட்டமாக அங்கு வசிக்கும் 1500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட... மேலும் பார்க்க

குவாலியர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து

குவாலியர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.ராகுல், சோனியாவுக்கு எதிராக நோட்டீஸ் ப... மேலும் பார்க்க

பாட்னா நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் மாநிலம் பாட்னா மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில தலைநகர் பாட்னாவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று (ஏப்.25) அடையாளம் தெரியாத மர்ம ... மேலும் பார்க்க