கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
அண்ணாமலைப் பல்கலை சாா்பில் அரசு பள்ளிக்கு உபகரணங்கள்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாயிலாக நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிக்கு அமெரிக்காவின் சியாட்டில் இந்தியா குழு மூலம் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நூற்றாண்டு காணும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளோடு சோ்ந்து சமூக வளா்ச்சியிலும் தன்னுடைய கவனத்தை செலுத்திவருகிறது . இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் உள்ள சியாட்டில் இந்தியா குழுவுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது.
திட்டத்தின் ஒரு பகுதியாக, சியாட்டில் இந்தியா குழு, உதவியுடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் தாலுகா வில்லிபாளையம் கிராமத்தில் உள்ளஅரசு பள்ளிக்கு தேவையான ரூபாய் நாற்பதாயிரம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட இருக்கிறது.
இதற்கான ஆணையினை திங்கள்கிழமை பல்கலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி முன்னிலையில், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை துணை இயக்குநா் சக்தி
கிருஷ்ணராஜ், அரசு பள்ளி தலைமை ஆசிரியா் கோபியிடம் வழங்கினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட
ஒருங்கிணைப்பாளா் கே.ஜெயபிரகாஷ், மித்ரா ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக உள்தர கட்டுப்பாட்டு மைய, இணை இயக்குநா் எஸ் ரமேஷ்குமாா், மாணவா் சோ்க்கை இயக்குநா் பி.பாலபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.