ரயில்வேக்கான நிதி நிலை அறிக்கையில் திட்ட விவரங்கள் நீக்கம்: எம்.பி. கண்டனம்
அதிக பேட்டரியுடன் தயாராகும் ஷாவ்மி 16! இந்தியாவில் எப்போது அறிமுகம்?
ஷாவ்மி 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி, ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனில் இதுவரை இந்நிறுவனத்தின் வேறு எந்த தயாரிப்பிலும் இல்லாத வகையில் 6800mah பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. இது ஷாவ்மி பயனர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாவ்மி நிறுவனம், இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக, தற்போது அதிக பேட்டரி திறனுடன் ஷாவ்மி 16 என்ற புதிய தயாரிப்பை ஷாவ்மி அறிமுகம் செய்யவுள்ளது. முதலில் சீனாவிலும் பிறகு இந்தியாவிலும் அறிமுகமாகிறது. இந்தியாவில், செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 8 எலைட் புராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த புராசஸருடன் இந்தியாவில் அறிமுகமாகும் ஷாவ்மியின் முதல் தயாரிப்பு இதுவாகும்.
6,800mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியுடன் ஷாவ்மி 16 பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் முந்தைய தயாரிப்பான ஷாவ்மி 15-ஐ விட இதில் மிக முக்கியமான மேம்பாட்டு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 100W சார்ஜிங் திறனும் வழங்கப்பட்டுள்ளன. இதற்குமுந்தைய தயாரிப்பில் 90W மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.
பின்பக்கம் 50 MP முதன்மை கேமராவும் அதற்கேற்ப முன்பக்க செல்ஃபி கேமராவும் பொருத்தப்படவுள்ளது.
மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் பெரிய திரை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்து ஷாவ்மி நிறுவனம் எதையும் குறிப்பிடவில்லை.