கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் ...
அதிமுக செயaற்குழு கூட்டம்! 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மாளிகையில், கழக அவைத்தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 375 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், பொன்னையன், எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, கே.பி. முனுசாமி , முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாதவரம் மூர்த்தி வருகை ஆகியோரும் பங்கேற்றனர்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, அதிமுகவின் முதல் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
செயற்குழு கூட்டத்தில் அதிமுக நிறைவேற்றிய 16 தீர்மானங்கள்
பொது எதிரியான திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துகளுடையவர்களுடன் சேர்ந்து மெகா கூட்டணி
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசு, மக்கள் மற்றும் மாணவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை, கச்சத்தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி என தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கண்டனம்
கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு, தற்போது அதனை மீட்பதற்காக, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் திமுகவுக்கு கண்டனம்
நீர் மேலாண்மையை முறையாகப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் மற்றும் நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்த பிரதமருக்கு நன்றி.
மதச்சார்பற்ற அதிமுக, என்றென்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்று உறுதி

கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள், கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்
பெண்களை தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடியை பதவிநீக்கம் செய்ய தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, போதைப் பொருள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை எதிர்த்து திமுக அரசுக்கு கண்டனம்
மக்கள் நலன்களைப் பாராமல், சுய விளம்பரம் செய்துவரும் திமுக அரசுக்கு கண்டனம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் மற்றும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அதிமுக துணை நிற்கும்.
பொது எதிரியான திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு முழு ஆதரவு
2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக மாற்றுவோம்.
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு வரவேற்பு
இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?