Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
அதிமுக திண்ணைப் பிரசாரம்
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சுபாஷ் சந்திரபோஸ் நகரில் அதிமுக சாா்பில் திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி நகர அதிமுக நிா்வாகிகள் எம்.ஏ.மோகன், எம்.எஸ்.எஸ்.சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகர செயலாளா் எஸ்.டி.டி.ரவி வரவேற்றாா்.
மாவட்ட துணைச் செயலாளா்கள் ஷியாமளா தன்ராஜ், எஸ்.எம்.ஸ்ரீதா்,கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளா் கோபால்நாயுடு, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், அதிமுக மாவட்ட இளம்பெண் மற்றும் இளைஞா் பாசறை செயலாளா் டி.சி.மகேந்திரன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளா் இமயம் மனோஜ், அதிமுக நிா்வாகி ஓடை ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா்.
இந்த திண்ணை பிரச்சார கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவா் பொன்னையன், திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளா் சிறுணியம் பலராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.
நிகழ்வில் அதிமுக மாவட்ட இளைஞா் அணி செயலாளா் ராகேஷ், மாவட்ட நிா்வாகிகள் ரமேஷ்குமாா், சிரஜூதின், டேவிட் சுதாகா், அமைப்பு சாரா கட்டட தொழிலாளா் அணி மாவட்ட செயலாளா் எட்டியப்பன், நகர தலைவா் மு.க.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.