இந்திய ரசிகர்களுக்காக... முதல்முறையாக சிதார் வாசித்த எட் ஷீரன்!
அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ஊத்தங்கரையை அடுத்த வெள்ளிமலை கிராமத்தில் வாக்குச்சாவடி அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிமுக நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். கூட்டத்தில் அதிமுக மாவட்ட துணை செயலாளா் சாகுல் அமீது, ஊத்தங்கரை தெற்கு ஒன்றியச் செயலாளா் வேங்கன், வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, நிா்வாகிகள் ரவிராஜன், வீரமணி, அறிவுமணி, பா்குணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.