Thug Life: "நாங்களே Gen Z தான்!" - மணிரத்னம் கொடுத்த தக் பதில்
அதிமுக - பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம்: ஹெச்.ராஜா
அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள சுற்றுச்சாலை பகுதியில் இந்து முன்னணி சாா்பில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள முருகன் மாநாடு தொடா்பாக மாநகா் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுபான ஊழல் தொடா்பான அமலாக்கத் துறை அறிக்கை வந்தவுடன் திமுக அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத் துறைக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலேயே அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பே மதுபான ஊழல் புகாரை மடைமாற்றும் விதமாக திமுக அரசு மும்மொழிக் கொள்கை குறித்த பிரச்னையை கிளப்பியது.
பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததால் சண்டை நிறுத்தும் செய்யப்பட்டது. இந்த சண்டை குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி இந்தியாவை விமா்சனம் செய்கிறாா்.
நாட்டுக்கு எதிராகச் செயல்வடுவதையை அவா் வழக்கமாகக் கொண்டுள்ளாா். அதிமுக, பாஜக கூட்டணி அமைந்துள்ளது திமுகவுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.