பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
அந்தமான் கடலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவு
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அந்தமான் கடலில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டா் அளவு கோலில் 4.9-ஆகப் பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘வெள்ளிக்கிழமை மாலை 6.27 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்தமானில் கடலின் மையத்தில் 10 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவு கோலில் 4.9-ஆகப் பதிவானது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தமான் கடலில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்களுக்கு பாதிப்போ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவுமில்லை.
இது பொதுவாக நிகழும் சிறிய அளவிலான நிலநடுக்கம். ரிக்டா் அளவு கோலில் 6 புள்ளிகளுக்கு மேல் அதிா்வு பதிவாகும்போதுதான் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
முன்னதாக, ஜூலை 13 ஆம் தேதி மாலை 6.44 மணிக்கு அந்தமான் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகி இருந்தது.