மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!
அந்தியூரில் கொமதேக ஆா்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கிகளில் பழைய முறையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அந்தியூா் கிளை முன்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டுறவு வங்கிகளில் வழங்கி வரும் பயிா்க் கடன்களுக்கு சிபில் ஸ்கோா் கேட்பதை ரத்து செய்து பழைய முறையில் கடன் வழங்க வேண்டும். கால்நடை பராமரிப்பு கடன் வழங்க ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். விவசாய பூமி ஒரு இடத்திலும், குடியிருப்பு மற்றொரு இடத்திலும் உள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கொமதேக மாநில இளைஞரணி துணைச் செயலாளா் துரை.ராஜா தலைமை வகித்தாா். இதில் கட்சி நிா்வாகிகள் 40க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.