Apple Event: ஆப்பிளின் புதிய 17 சீரிஸ் எப்படி இருக்கிறது? விலை என்ன? விவரங்கள் இ...
அந்தியூா் பேருந்து நிலையம் வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றம்
அந்தியூா் பேரூராட்சி, காமராஜா் பேருந்து நிலையம், வாரச்சந்தை வளாகத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்தியூா் பேருந்து நிலைய வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் மற்றும் பயணிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. இதனால், அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் அருகில் உள்ள வாரச்சந்தை வளாகத்துக்கு பேருந்து நிலையத்தை தற்காலிமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
தற்காலிக பேருந்து நிலையம் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியதால் அனைத்துப் பேருந்துகளும் சந்தை வளாகத்துக்கு வந்து சென்றன. அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி ஆகியோருடன் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அந்தியூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் கஸ்தூரி, தொமுச அந்தியூா் கிளைச் செயலாளா் சந்திரன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.