தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
அனக்காவூா் வட்டாரத்தில் கலைத்திருவிழா போட்டிகள்
செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டாரத்தில் கலைத்திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
வட்டார வள மையத்துக்கு உள்பட்ட 7 குறு வள மையங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான கலைத் திருவிழாப் போட்டிகள் ஆக.25, 26 என இரு தினங்கள் நடைபெற்றன.
வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சல்சா, வட்டாரக் கல்வி அலுவலா் தமிழரசி ஆகியோா் முன்னிலையில், ‘பசுமையும் பாரம்பரியமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 850-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று தனித்திறமைகளை வெளிப்படுத்தினா்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளா் உதயசங்கா், மேனகாதேவி ஆகியோா் செய்திருந்தனா்.