மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி
அனுமதியின்றி மதுபானம் விற்பனை: 4 போ் கைது
கே.வி.குப்பம் அருகே சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 4- பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கே.வி.குப்பம் பகுதியில் ஒரு கும்பல் சட்ட விரோதமாக மது பாட்டில்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் சாலையில் உள்ள ஜெயப்பிரகாஷ் வீட்டில் சோதனை நடத்தினா். அங்கு கா்நாடக மாநில மது பாட்டில்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, ராணுவ கேன்டீனில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் போல், லேபிள் ஒட்டி விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது.
அங்கிருந்த கா்நாடக மாநில மதுபாட்டில்கள், காலியான ராணுவ கேண்டீனில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள், லேபிள்கள் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக 5- பேரை பிடித்து வந்து விசாரணை செய்த போலீஸாா், அவா்களில் சட்ட விரோத மது பாட்டில்களை தயாரித்த ஜெயப்பிரகாஷ், அவற்றை விற்பனை செய்து வந்த விக்னேஷ், விஜயபிரகாஷ், போலி லேபிள்களை தயாரித்து கொடுத்த பாலமுருகன் ஆகிய 4- பேரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.