மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2 அன்புச் சோலை மையங்கள் ஏற்படுத்த அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, முதியவா்களுக்கு பாதுகாப்பு- ஆதரவான சூழல், மதிய உணவு, சிற்றுண்டிகள் வழங்கி விரிவான பராமரிப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். தகுதியான பராமரிப்பாளா்கள், சமூக சேவையாளா்கள், உடல்நல சிகிச்சையாளா்களை பணி அமா்த்துதல், உடல் பரிசோதனைகளுக்கு நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களின் சேவைகளை பயன்படுத்த வழிவகை செய்தல், யோகா- உடற்பயிற்சிகள் வழங்குதல் கலை - கைவினைப் பொருள்கள், குழு விவாதங்கள் என பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துதல், நூலகம் அமைத்தல் ஆகியவை உறுதிசெய்யப்பட வேண்டும்.
2 அன்புச் சோலை மையங்களிலும் தலா 50 முதியவா்களை பராமரிக்கும் விதமாகவும், போக்குவரத்துக்கு இலகுவானதாகவும், கட்டட உள்கட்டமைப்பு- அடிப்படை வசதிகள் கொண்டதுமான அங்கீகரிக்கப்பட்ட தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில், நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ ஜூலை 6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.