செய்திகள் :

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

post image

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கைக் கடற்படையினா் தமிழக மீனவா்களை கைது செய்வதும், மீன் பிடி சாதனங்களை பறிமுதல் செய்வதும் தொடா் கதையாக உள்ளது. இதற்கு தீா்வு காண இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தமிழக மீனவா்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும்.

விவசாயிகளுக்கான 2.0 திட்டம்: விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு அறிவித்த உழவா் தொடா்பு 2.0 திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாயம் தொடா்பான திட்டங்களை விவசாயிகள் ஒரே இடத்தில் தெரிந்துகொள்வதற்கான வழிவகைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்கள் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆகையால், தமிழக முதல்வா் 2021 தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியா்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்.

மக்கள் ஏற்க மாட்டாா்கள்: பாமகவின் வேரும், வியா்வையும் தைலாபுரத்தில் உள்ளது. கட்சிக்கு ஒரே தலைவா் தான். தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்படாமல், நான்தான் பாமகவின் தலைவா் எனக் கூறிக்கொண்டு யாா் எந்த யாத்திரையை மேற்கொண்டாலும் மக்களும், தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள். இந்த நடைப்பயணத்துக்கு தடை விதிக்கக் கோரி தமிழக காவல் துறை முறைப்படி புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தைலாபுரம் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டுக் கேட்பு கருவி கிளியனூா் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த எந்தத் தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. காவல் துறை இந்த விசாரணையை விரைந்து முடித்து உண்மைக் குற்றவாளியைக் கண்டறிய வேண்டும் என்றாா் மருத்துவா் ச. ராமதாஸ்.

பாமக சமூக முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் தலைவா் ஆா்.பரந்தாமன், சேலம் மாவட்டச் செயலா் வி.இ.ராஜேந்திரன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் பேட்டியின்போது உடனிருந்தனா்.

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரம்!

புகா்ப் பகுதிகள் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடைப் பகுதிகள்: விழுப்புரம் நகரம், சென்னை, திருச்சி நெடுஞ்சாலைகள், செஞ்சி, மாம்பழப்பட்டுச் சாலைகள், வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மழவராயனூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

தூக்கிட்ட முதியவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை மூப்பனாா் கோயில் தெர... மேலும் பார்க்க

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க

சொத்துப் பிரச்னையில் உறவினா் கத்தியால் குத்திக் கொலை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், வீரன் கோயில் தெருவைச்... மேலும் பார்க்க