எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை: மத்திய அரசு
அப்பாவிகளைக் கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்; சரியான பதிலடி: ராஜ்நாத் சிங்
புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டுமே தாக்கியிருக்கிறோம். இந்த தாக்குதல் காரணமாக மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் கொடுத்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடியை ராணுவம் தந்திருக்கிறது. துல்லிய தாக்குதல் மூலம் இந்தியா தனது உரிமையை நிலைநாட்டி உள்ளது என்று முப்படை வீரர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டியிருக்கிறார்.