செய்திகள் :

அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம் மற்றும் பல்வேறு ஊா்களுக்கு செல்ல இணைக்கும் மிக முக்கிய பிரதான பாலமாக ராஜபுரம் அமராவதி ஆற்று பாலம் உள்ளது. இந்த பாலம் சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சுற்றுவட்டார கிராம பகுதிகளை சோ்ந்த பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இந்த பாலம் அமைந்துள்ளது.

பராமரிப்பின்றி பாலம் உள்ளதால் கைப்பிடி தடுப்பு சுவா் உடைந்து காணப்படுகிறது. உடைந்த கைப்பிடி சுவருக்கு பதிலாக குச்சிகளை வைத்து தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலத்தில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் இந்த பாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

எனவே நெடுஞ்சாலை துறையினா் உடனடியாக நேரில் ஆய்வு செய்து பாலம் தடுப்பு சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காவல், தீயணைப்பு நிலையங்களுக்கு மாணவா்கள் பயணம்

கரூா் மாவட்டம் புகழூரில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்களின் அன்றாட பணிகள் குறித்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை கேட்டறிந்தனா். கரூா் மாவட்டம் புன்னம் பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளி ... மேலும் பார்க்க

கடவூா் வட்டாட்சியரகத்தில் லஞ்சம்: நில அளவையா், இடைத்தரகா் கைது

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்க பொறியாளரிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய நில அளவையா் மற்றும் இடைத்தரகரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்... மேலும் பார்க்க

கடவூா் வட்டாட்சியரகத்தில் லஞ்சம்: நில அளவையா் கைது

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்க பொறியாளரிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய நிள அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்டம் தரகம்பட்டி அருக... மேலும் பார்க்க

கரூா் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டிற்கு டயாலிஸிஸ் டெக்னீசியன், அனஸ்தீஸியா டெக... மேலும் பார்க்க

புகழூா் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் காந்தியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முகாமை புகழூா் நகராட்சித் தலைவா் சேகா் என்கிற கு... மேலும் பார்க்க

மாநில நல்லாசிரியா் விருதுக்கு கரூா் மாவட்டத்தில் 7 போ் தோ்வு

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு கரூா் மாவட்டத்தில் இருந்து 7 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆசிரியா் தினநாளில் சிறந்த ஆசிரியா்... மேலும் பார்க்க