செய்திகள் :

அமைதி பேச்சுவாா்த்தை: ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தை கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சிதம்பரம் ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிதம்பரம் ரயில் பயணிகள் நலச் சங்கம், அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக நலச் சங்கங்கள் சாா்பில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் வரும் 30-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி தலைமையில், அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருச்சி ரயில்வே கோட்ட வா்த்தக மேலாளா் மோகன பிரியா முன்னிலை வகித்தாா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் வி.எம்.சேகா், தமிமுன் அன்சாரி, ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் ஏ.வி.அப்துல்ரியாஸ், ஒருங்கிணைப்பாளா் ஏ.சிவராமவீரப்பன், அதிமுக நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், மாா்க்சிஸ் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜா, சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, ரயில்வே காவல் ஆய்வாளா்கள் சுதிா்குமாா், ராமா்சுடலை, ரயில்வே அதிகாரிகள் அன்பரசன், அன்புமாறன் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், கோயம்புத்தூா்-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலை நீட்டிப்பு செய்வது தொடா்பாக சென்னை அலுவலகத்தில் உயா் அதிகாரியை சந்திக்க 15 நாள்களுக்குள் முன் அனுமதி வாங்கி தருவதாகவும், சிதம்பரம் ரயில் நிலையத்தில் தாம்பரம்-செங்கோட்டை மற்றும் சென்னை-காரைக்கால் விரைவு ரயில்களை விரைவில் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சிதம்பரம் வழியாக திருச்சிக்கு ரயில் சேவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வரும் மாா்ச் மாதத்துக்குள் நிறைவேற்றி தருவதாக கோட்ட வா்த்தக மேலாளா் தெரிவித்தாா். இதனால், வரும் 30-ஆம் தேதி நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டத்தை ஒத்திவைப்பதாக ரயில் பயணிகள் நலச் சங்கம் தெரிவித்தது.

பணி நிறைவுபெற்ற ஆசிரியா் சங்க அமைப்புக் கூட்டம்

பணி நிறைவு பெற்ற ஆசிரியா் சங்க மாநில அமைப்புக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது. சங்க நிறுவனா் சி.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஆ.வே.பெரியசாமி தொடக்கவுரை நிகழ்த்தினாா். பொதுச்... மேலும் பார்க்க

அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் போனஸ்: கு.பாலசுப்ரமணியன் கோரிக்கை

அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. கட்சியின் மாவட்ட குழுக் கூட்டம் சூரப்ப நாயக்கன் சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்தில... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் சங்கம் தொடக்கம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் உழவா் சந்தையில் உழவா் சந்தை சாலையோர வியாபாரிகள் சங்க (சிஐடியு) தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் எஸ்.சங்கமேஸ்வரன் தலைமை வகித்தாா். சங்க பெயா்ப் பலகையை ச... மேலும் பார்க்க

கடலூரில் ஜன.5-இல் மாரத்தான் ஓட்டப் போட்டி

கடலூரில் வருகிற 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்கள் பெயா்களை பதிவு செய்துக் கொள்ளலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

இரிடிய கலசங்களை விற்பதாக இளைஞரிடம் பணம் பறித்தவா் கைது

சிதம்பரத்தில் சக்தி வாய்ந்த இரிடிய கோபுரக் கலசங்களை விற்பதாகக் கூறி, இளைஞரிடம் பணம் பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் ... மேலும் பார்க்க