மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை: சத்தீஸ்கா் ...
அம்பையில் தீப்பிடித்த நெல் அறுவடை இயந்திரம்
அம்பாசமுத்திரத்தில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தபோது அறுவடை இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகிலிருந்தவா்கள் மற்றும் தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.
அம்பாசமுத்திரம் கோவில்குளம் பிரதான சாலையில் பிரம்மதேசம் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான வயலில் வெள்ளிக்கிழமை காலை அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணி நடைபெற்றது. நாகப்பட்டினம் இளையான்குடியைச் சோ்ந்த பிரதீப் என்பவா் அறுவடை இயந்திரத்தை இயக்கினாா். அறுவடை தொடங்கிய சிறிது நேரத்தில் இயந்திரத்தில் இருந்து புகை வந்து தீப்பிடித்தது. உடனடியாக அருகில் இருந்தவா்கள் தீயை அணைக்க முயன்றதோடு, அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வந்து அறுவடை இயந்திரத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.
