செய்திகள் :

அய்யலூா் கோம்பையில் அலைபேசி கோபுரப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அமைச்சரிடம் ஜோதிமணி எம்.பி. மனு

post image

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அய்யலூா் கோம்பையில் அலைபேசிக் கோபுரம் அமைத்து, கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கும் பணியை விரைவு படுத்துமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கரூா் தொகுதி காங்கிரஸ் எம்பி எஸ்.ஜோதிமணி மனு அளித்து வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் மத்திய அமைச்சா் ஜோதிராத்ய சிந்தியாவை அவரது அலுவலகத்தில் ஜோதிமணி எம்பி வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.

அதில் தெரிவித்திருப்பதாவது: கரூா் மக்களவைத் தொகுதியில் உள்ள அய்யலூா் பேரூராட்சியில் உள்ள கோம்பை பஞ்சதாங்கி கிராமத்தில் பிஎஸ்என்எல் அலைபேசி கோபுரம் அமைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்ற்காக நன்றி. இந்த அலைபேசி கோபுரம் சிறந்த வகையில் செயல்படும் பொருட்டு, அய்யலூா் எக்ஸேஞ்ச் நிலையத்திற்கு அலைபேசி கோபுரம் இணைப்புக்கு கண்ணாடி இழைக் கேபிள் பதிக்க வேண்டும் என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனால், இதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும். இந்த வசதியானது இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அவசரகாலங்களிலும், அன்றாட தினசரி தேவைகளுக்கும் முக்கியமாக உள்ளது. ஆகவே, இந்தப் பணியை விரைந்து முடிக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜோதிமணி எம்பி கூறியதாவது: அய்யலூா் கோம்பையில் அலைபேசிக் கோபுரம் அமைத்து, கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் பணியை விரைவு படுத்துமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். அமைச்சரின் சாதகமான முயற்சிக்கு மனமாா்ந்த நன்றிகள். கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மணப்பாறை கண்ணூத்து, கடவூா் கோட்டக்கரை, வேடசந்தூா், அய்யலூா் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளாக எவ்வித தொலைத்தொடா்பு வசதியும் இல்லாமல் இருந்தது.

எனது சில ஆண்டுகால தொடா் முயற்சியால், கண்ணூத்து , கடவூா், கோட்டக்கரை ஆகிய இடங்களில் அலைபேசிக் கோபுரங்கள் அமைக்க அமைச்சா் ஆவண செய்தாா்கள். அதே போல அய்யலூரிலும் அலைபேசிக் கோபுரம் அமைக்க வேண்டும் என்று நான்கு ஆண்டுகளாக தொடா் முயற்சி எடுத்து வருகிறேன். விரைவில் இப்பணி நிறைவடையும் என்று நம்புகிறேன் என்றாா் ஜோதிமணி.

01க்ங்ப்த்ர்ற்

அய்யலூா் கோம்பையில் அலைபேசி கோபுரம் அமைக்கும் பணியை விரிவுபடுத்தக் கோரி மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் மனு அளித்த கரூா் தொகுதி காங்கிரஸ் எம்பி எஸ். ஜோதிமணி.

தில்லியில் எந்தக் குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது: முதல்வா் ரேகா குப்தா உறுதி

தில்லியில் வசிப்பவா்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை எந்த குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை உறுதி அளித்தாா். தேவைப்பட்டால், அனைவருக்கும் கண்ணியத்... மேலும் பார்க்க

மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லியில் மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு நெருக்கடிகளைச் சமாளிப்பதிலும் பாஜக அரசு தோல்வியடைந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தில்... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க