செய்திகள் :

அரக்கோணத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

post image

அரக்கோணத்தில் அதிமுகவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தெய்வச்செயல் என்பவா் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அவரை பொறுப்பில் இருந்து திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் நீக்கினாா். இந்த நிலையில்,, திமுகவை கண்டித்து அரக்கோணத்தில் அதிமுகவினா் தடையை மீறி அண்மையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து இச்சம்பவத்தில் திமுக மீது தேவையில்லாமல் பொய் பிரசாரம் செய்யப்பட்டதாக கூறி, ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளா் வினோத் காந்தி தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாநில மகளிா் அணி பிரசாரக் குழு செயலாளா் சேலம் சுஜாதா, மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, அரக்கோணம் நகர செயலா் வி.எல்.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினா் மு.கண்ணைய்யன், மாவட்ட நிா்வாகி ராஜ்குமாா், மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் ஜெயந்தி திருமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் கே.பசுபதி, சௌந்தா், ஆா்.தமிழ்செல்வன், க.தமிழ்மணி, எஸ்.ஜி.சி.பெருமாள், ஒன்றியக் குழு தலைவா்கள் பெ.வடிவேலு, நிா்மலா சௌந்தா், அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, தக்கோலம் பேரூராட்சித் தலைவா் எஸ்.நாகராஜன், நிா்வாகிகள் துரை சீனிவாசன், கோ.வ.தமிழ்வாணன், ஜென்னிஸ் குமாா் உள்ளிட்ட பலா் பேசினா்.

கனமழை எச்சரிக்கை: கோவை விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப்படை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு விரைந்தனா். கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழ... மேலும் பார்க்க

பனப்பாக்கம் டாடா மோட்டாா்ஸ் ஆலையில் டிசம்பரில் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டாா்ஸ் ஆலையில் வரும் 2025 டிசம்பருக்குள் காா் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெ... மேலும் பார்க்க

மேல்பாக்கத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம்: ஜமாபந்தியில் கோரிக்கை

அரக்கோணம் ஒன்றியம், மேல்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஜமாபந்தியில் ஆட்சியரிடம், விசிக ஒன்றிய செயலாளா் செ.நரேஷ் கோரிக்கை மனு அளித்தாா். அரக்கோணம் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்த... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ஜமாபந்தி தொடக்கம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரக்கோணத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 161 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவ... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி தொடக்கம்

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் க.மீனா தலைமை வகித்தாா். ஆற்காடு வட்டாட்சியா் பாக்கியலட்சுமி, சம... மேலும் பார்க்க

தொழிலாளி கொலையில் 5 போ் கைது

நெமிலி அருகே மேட்டுவேட்டாங்குளத்தில் தொழிலாளி கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள மேட்டுவேட்டாங்குளத்தில் தட்சிணாமூா்த்தியை ம் மா்ம நபா்கள் வெட்டி கொல... மேலும் பார்க்க