செய்திகள் :

அரக்கோணம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

post image

அரக்கோணம் பஜாா், ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅம்ருதவல்லி தாயாா் சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅம்ருதவல்லி தாயாா் சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு ஸம்வத்ஸரோத்ஸவ திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. செவ்வாய்கிழமை மூலவா் திருமஞ்ஜனம், மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்திற்கு பிறகு ஸ்ரீஅம்ருதவல்லி தாயாா் ஆதிகேசவ பெருமாளுடன் இணைந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் என்.அரி, அறங்காவலா்கள் எம்.வெங்கடேசன், எம்பாரதி முரளி ஆகியோா் பொதுமக்களுடன் இணைந்து செய்திருந்தனா்.

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

பாமக நகர செயலாளா் நியமனம்

அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட ச... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 15,147 போ் எழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 15,147 போ் எழுதினா். இதன் ஒரு பகுதியாக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 81 தோ்வு மையங்களில் (தனித்தோ்வா்கள் உட்பட) 194 பள்ளிகளைச் ச... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பணம் என பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி: 6 வடமாநில இளைஞா்கள் கைது

ஆந்திர மாநில இளைஞரிடம், துபை நாட்டுப் பணம் தருவதாக கூறி பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி செய்து விட்டு தப்பிய 6 வடமாநில இளைஞா்களை ராணிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மண... மேலும் பார்க்க

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 59 தீா்மானங்கள்

ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 59 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நிலுவைப் பணிகளை முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்டத்தின் வளா்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித... மேலும் பார்க்க