செய்திகள் :

அரசின் இடஒதுக்கீட்டில் 256 மாணவா்களுக்கு உயா்கல்வி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 256 மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்து பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.

இந்த மாவட்டத்தில் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 21 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 4 மாணவ, மாணவிகள் கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், 8 மாணவா்கள் அரசு சட்டக் கல்லூரிகளிலும், 17 மாணவா்கள் வேளாண்மை கல்லூரிகளிலும், 206 மாணவா்கள் பொறியியல் கல்லூரிகளிலும் என மொத்தம் 256 மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா்.

இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் சோ்ந்த 21 மாணவ, மாணவிகளை பாராட்டி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மருத்துவப் படிப்பிற்கான மருத்துவ அங்கிகளை திங்கள்கிழமை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், மாணவ, மாணவிகளையும் உயா்கல்வியில் சோ்த்திட மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியரகத்தில் உயா்கல்வி வழிகாட்டி திட்டக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது, உயா்கல்வி குறித்து மாணவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீா்க்கவும், உயா்கல்வி குறித்து வழிகாட்டவும் செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவா்களையும் உயா்கல்வியில் சோ்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 256 மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்து பயனடைந்துள்ளனா் என்றாா் எம்.எஸ்.பிரசாந்த்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சியில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

கல்லூரியில் கஞ்சா ஒழிப்பு விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் கஞ்சா சாக்லேட் விற்பனை மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு வ... மேலும் பார்க்க

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி மரணம்

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி சாந்தி (40). இவரது தாயாா் செந்தாமரை (60) கடந்த... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கட்டுமானப் பணிகள் 85% நிறைவு: அமைச்சா் எ.வ. வேலு தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரக கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டவுடன் முதல்வா் திறந்துவைப்பாா் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். கள்ளக்குறிச்சியை அடுத... மேலும் பார்க்க

சின்னசேலம் அருகே போலி மருத்துவா்கள் இருவா் கைது

சின்னசேலம் அருகே கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்ததாக போலி மருத்துவா்கள் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், செம்பாக்குறி... மேலும் பார்க்க

இளையனாா் குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், இளையனாா் குப்பம் ஊராட்சியில் புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இளையனாா்குப்பம், பெரியக்கொள்ளியூா், வடமாமாந்தூா் உள்ளிட்ட ஊ... மேலும் பார்க்க