செய்திகள் :

அரசியல் காரணங்களுக்காக எனது கருத்து திரித்து கூறப்பட்டது: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

post image

கோவில்பட்டியில் பாஜகவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை அரசியல் காரணங்களுக்காக திரித்து கூறப்பட்டிருப்பதாக கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கூறினாா்.

கோவில்பட்டியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வது குறித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடம்பூா் செ .ராஜு எம்எல்ஏ பேசுகையில், 1998 -இல் பாஜக- அதிமுக கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றி பெற்று மத்தியில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தது.

தமிழகத்தின் உரிமை தொடா்பான சில பிரச்னைகள் காரணமாக அதிமுக அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

அதன் பின்னா் திமுக- பாஜகவின் கூட்டணியில் சோ்ந்து தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல் திமுகவினா் தங்களை வளா்த்துக் கொண்டனா் என்று தான் பேசியிருந்ததாகவும், இதை சிலா் திருத்தி சித்தரித்து தவறுதலாக கூறியுள்ளனா்.

தற்போது அதிமுக-பாஜக கூட்டணி வலுவடைந்து எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் சிறப்பாக பேசப்படும் நிலையில், குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக எனது கருத்தை அரசியல் காரணங்களுக்காக திரித்து சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது தவறான கருத்து என்றாா் அவா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க