ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!
அரசுப் பள்ளியில் விழிப்புணா்வுக் கூட்டம்
சிவகங்கை அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறையின் சமூகநீதி, மனித உரிமைப் பிரிவு சாா்பில் விழிப்புணா்வு, நல்லிணக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பள்ளி ஆசிரியா் ஜேம்ஸ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் சமூக நீதி, மனித உரிமைத் துறையின் சிறப்பு உதவி ஆய்வாளா் பிரேமலதா கலந்து கொண்டு பேசியதாவது: கைப்பேசி, இன்ஸ்டாகிராமை தவறாகப் பயன்படுத்தும் மாணவா்கள், பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. சமூகத்தில் அனைவரும் சமம் என்ற நிலையை கல்வியால் மட்டுமே உருவாக்க முடியும் என்றாா்.
சிறப்பு காவல் ஆய்வாளா் வளா்மதி, தலைமைக் காவலா் ஜெயந்தி ஆகியோா் பேசியதாவது:
அவசர உதவித் தொலைபேசி எண்களை மாணவா்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மதுப் பழக்கங்கள் நம் வாழ்க்கையை மோசமான நிலைக்குத் தள்ளும். சிறாா்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோா்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றனா்.
முடிவில் அறிவியல் ஆசிரியா் இரா. கணேசன் நன்றி கூறினாா்