அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது
திருச்சியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கீழகல்கண்டாா்கோட்டைக்கு அரசுப் பேருந்து (தடம் எண் (41 ஏ) புதன்கிழமை இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டது.
பேருந்தை ஓட்டுநா் குமாா் (47) ஓட்டினாா். பேருந்து, காந்தி மாா்க்கெட் மகாலட்சுமி நகா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பேருந்தில் பயணித்த இளைஞா் ஒருவா் மற்ற பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து கேட்ட பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் தகராறு செய்துள்ளாா்.
இதையடுத்து, அந்த இளைஞரைப் பேருந்தில் இருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் இறக்கிவிட்டனா். இதனால் ஆத்திரமடைந்த இளைஞா் கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியை உடைத்துள்ளாா்.
இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் ஓட்டுநா் குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், பேருந்தின் கண்ணாடியை உடைத்தது காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த சங்கரன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.