அடிமைக் கட்சியல்ல திமுக; யாருக்கும் அடிபணிய மாட்டோம்! - உதயநிதி ஸ்டாலின்
அரசுப் பேருந்து மோதியதில் அண்ணன் பலி: தம்பி காயம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் வியாழக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா், தம்பி பலத்த காயமடைந்தாா்.
தஞ்சாவூா் அருகே கூடலூரைச் சோ்ந்தவா் ராஜப்பா மகன் எபினேசா் (31). இவரும், இவரது அண்ணன் குமாரும் (50) மோட்டாா் சைக்கிளில் திருவையாறு காவிரிப் பாலத்தில் வியாழக்கிழமை மாலை சென்றபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இவா்களில் குமாா் உயிரிழந்தாா். எபினேசா் தொடா்ந்து சிகிச்சை பெறுகிறாா். திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.