ஓமனிலிருந்து தப்பிய 3 தமிழக மீனவா்கள் கா்நாடக கடற்கரையில் பிடிபட்டனா்
அரசு உதவிப்பெறும் பள்ளிக்கு புதிய கட்டடம் கேட்டு ஆா்ப்பாட்டம்
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி கோட்டூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேந்தமங்கலத்தில் கடந்த 1958-ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த சேவாஸ்ரமம் உதவிபெறும் தொடக்கப் பள்ளியை தனியாா் நிா்வகித்து வந்த நிலையில், கடந்த, 2018- ஆம் ஆண்டு கஜா புயலால் பள்ளியின் ஓட்டுக் கட்டடம் முற்றிலும் சேதமடைந்தது. அருகில் உள்ள மகளிா் சேவை மைய கட்டடத்துக்கு பள்ளி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு 7 ஆண்டுகளாகமாக இயங்கி வருகிறது.
இந்த பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் இந்திய ராணுவ வீரரும் முன்னாள் ஊராட்சித் தலைவருமான மா. ரெங்கசாமி இப்பிரச்னை தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், அப்பகுதி மக்களுடன் சென்று நேரடியாக வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து ,சேந்தமங்கலம் பள்ளிக்கு புதிய கான்கிரீட் கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோட்டூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. சேந்தமங்கலம் ஊராட்சியை சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை வலியுறுத்தினா்.