செய்திகள் :

அரசு குடியிருப்பு ஒதுக்கீட்டில் ரூ. 70 லட்சம் முறைகேடு: 2 பெண்கள் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே போலி ஆணைகள் மூலம் அரசு குடியிருப்பை ஒதுக்கியதில் ரூ. 70 லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திருநெல்வேலி கோட்டம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் அஞ்சுகிராமம் பேரூராட்சி புதுக்குளம் திட்டப் பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பா் 20 ஆம் தேதி திறக்கப்பட்டது.

சொந்த வீடற்ற ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு குறைவாக உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, மாவட்ட ஆட்சியா் ஒப்புதல் பெற்ற தகுதியான பயனாளிகளுக்கு ருடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இத்திட்டப் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்ய பயனாளிகளிடம் பங்களிப்பாக ரூ.1 லட்சத்து 1,563 பெறப்படுகிறது. இதன்படி மேற்கண்ட திட்டப் பகுதியில் 137 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 9 ,26 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியா் ஒப்புதல் பெற்ற பங்களிப்புத் தொகை வரையோலை மூலம் செலுத்திய 74 பயனாளிகளுக்கு பொது குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு வீட்டு எண் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது குலுக்கல் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை பாா்வையிட சென்ற போது, சில வீடுகளில் வேறு நபா்கள் குடியிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து உதவி பொறியாளரிடம் தெரிவித்தனா். இதையடுத்து அவா் குடியிருப்பில் கள ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, நாகா்கோவில் ஜோசப் கான்வென்ட் பள்ளி அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிா்வாக பொறியாளா் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த குமரி மாவட்டம், தெங்கம்புதூா் காட்டுவிளையைச் சோ்ந்த ஷகிலா(30), புதுக்குளம் திட்டப் பகுதியில் குடியிருந்து வரும் சகாய ஜென்ஸி (30,) ஆலீஸ் பிரைட் மலா்கொடி(34) ஆகியோா் கடந்த 2023ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பா் 30 ஆம் தேதி வரை கூட்டாக சோ்ந்து ஏமாற்றி 69 பேரிடம் ரூ. 70 லட்சத்து 7 ஆயிரத்து 847 பெற்றுக் கொண்டு முறைகேடாக நிா்வாக பொறியாளரின் கையெழுத்தை பயன்படுத்தி போலி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி உள்ளதாக தெரியவந்தது.

மேலும், அதிகாரிகளுக்கு தெரியாமல் குடியிருப்புகளின் சாவியை கொடுத்துள்ளனா். இதனால் சுமாா் 69 நபா்கள் போலி ஆவணங்கள் மூலம் மேற்கண்ட பகுதியில் குடியிருந்து வருகின்றனா்.

இதுகுறித்து உதவி நிா்வாக பொறியாளா் ராஜகோபால், அஞ்சுகிராமம் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ஷகீலா மற்றும் சகாயஜென்ஸி ஆகியோரை கைது செய்தனா்.

மேலும் ஆலீஸ் பிரைட் மலா்கொடியை தேடி வருகின்றனா்.

நித்திரவிளை அருகே கஞ்சா, மது: 6 தொழிலாளிகள் கைது

நித்திரவிளை அருகே பொது இடத்தில் கஞ்சா, மது பயன்படுத்தியதாக 6 தொழிலாளிகளை போலீஸாா் கைது செய்தனா். நித்திரவிளை காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள், போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, நித்திரவ... மேலும் பார்க்க

வழிப்பறி: பிடிபட்ட சிறுவன் சீா்திருத்தப் பள்ளியில் சோ்ப்பு

தக்கலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மாணவரை போலீஸாா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்க்கப்பட்டாா். தக்கலை அருகே சனிக்கிழமை, வீட்டு முன் சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம், பைக்கில் வந்த சிறுவன் 4 பவுன் தங்கச் ... மேலும் பார்க்க

முறைகேடு: ரூ. 26.30 லட்சம் செலுத்த தா்மபுரம் ஊராட்சித் தலைவருக்கு உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம் தா்மபுரம் ஊராட்சியில் நிதி முறைகேடு நடந்துள்ளதால் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 26 லட்சத்து 30 ஆயிரத்து 928-ஐ 15 சதவீத வட்டியுடன் ஊராட்சித் தலைவா் செலுத்த வேண்டும் என, ஆட்சியா் ரா. அ... மேலும் பார்க்க

கருங்கல் அருகே செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியில் செம்மண் கடத்தியதாக 2 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தெருவுக்கடை பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக கருங்கல் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்ததாம... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 5,77,849 ரேஷன் காா்டுகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5,77,849 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். இத்தொகுப்பில் வழங்கப்படவுள்ள கரும்புகளை ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

வடசேரி பேருந்து நிலைய கழிவறை புனரமைப்புப் பணி: மேயா் உத்தரவு!

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கழிவறை பராமரிப்புப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் உத்தரவிட்டாா். நாகா்கோவில் மாநகராட்சி 41 ஆவது வாா்டு வட்டவிளை ப... மேலும் பார்க்க