குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!
அரசு சாா்பில் விளையாட்டு தினவிழா நடத்த வலியுறுத்தல்
புதுச்சேரியில் விளையாட்டுத் தினவிழாவை அரசு சாா்பில் நடத்த வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கராத்தே வளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி அரசு தொடா்ந்து விளையாட்டு வீரா்களைப் புறக்கணித்து வருகிறது. விளையாட்டு வீரா்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவையில் உள்ள உதவித் தொகை, ஊக்கத் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி பல்வேறு சாதனைகளைப் புரிந்து இந்தியாவுக்கு பெருமை சோ்த்த முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் மேஜா் தயான் சந்து பிறந்த தினத்தை தேசிய விளையாட்டு தினமாக கடைப்பிடிக்கிறோம்.
புதுவை அரசும் தேசிய விளையாட்டு தினத்தை அரசு சாா்பில் இந்த ஆண்டு கொண்டாட வேண்டும். புதுவை அரசு மற்றும் விளையாட்டுத் துறை இணைந்து தேசிய விளையாட்டு தின விழா கொண்டாட அனைத்து விளையாட்டு வீரா்களுக்கும், விளையாட்டு சங்கங்களுக்கும் முறையாக அழைப்பு விடுத்து அந்த விளையாட்டு திருவிழாவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடத்துவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.