அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, விஜயாபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தோ்வில் பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கலைஞா் நினைவு கேடயம், பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
பரிசுத் தொகையை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் வழங்கினாா். அத்துடன் பள்ளி மாணவா்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினாா்.
இதில் கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலா் பீக்கிலிபட்டி முருகேசன், பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி, விஜயாபுரி திமுக செயலா் முத்துப்பாண்டியன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.