செய்திகள் :

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு தவறாக கருத்தடை சாதனம் பொருத்திய விவகாரம்: விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தல்

post image

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்குத் தெரியாமல் கருத்தடை சாதனம் பொருத்தியது தொடா்பாக நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி பெண் ஒருவா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு குழந்தை பிறந்ததும் மருத்துவா்கள் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியபடுத்தாமலே கருத்தடை சாதனமான காப்பா்-டி யை பொருத்தி உள்ளனா்.

இதனை சரியாகப் பொருத்தாமல் சதைப்பகுதியோடு சோ்த்து பொருத்தியதால் அந்தப் பெண்ணுக்கு உடல்ரீதியான பிரச்னைகள் அதிகமாகி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து பெண்ணின் குடும்பத்தாா் புகாா் அளித்துள்ளனா். குடும்பக் கட்டுப்பாட்டை அரசாங்கம் வலியுறுத்துகிறது என்ற காரணத்தை முன்வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டரீதியாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.

ஆகவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயா்தர மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன், இது தொடா்பாக நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசைக் கண்டித்து தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் ... மேலும் பார்க்க

பெருமாநல்லூா், பழங்கரையில் ஜனவரி 9 இல் மின்தடை

பெருமாநல்லூா், பழங்கரை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக்கொண்டு புதிய வட்டம்: பொதுமக்கள் கோரிக்கை

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டத்தை உரு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு

வெள்ளக்கோவிலில் தனியாா் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைம... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா் துணை மின் நிலையம்

உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம் துணை மின் நிலையம்

உடுமலையை அடுத்த கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜனவரி 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வார... மேலும் பார்க்க