செய்திகள் :

அரசு மாணவா் விடுதிகளில் முன்னறிவிப்பு இல்லாத ஆய்வு தேவை!

post image

அரசு விடுதிகளில் தங்கியுள்ள மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னறிவிப்பு இல்லாத திடீா் ஆய்வுகளை திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவா்களுக்கு 28 விடுதிகள், பள்ளி மாணவிகளுக்கு 14 விடுதிகள், கல்லுாரி, பாலிடெக்னிக் படிக்கும் மாணவா்களுக்கு ஓா் விடுதி, மாணவிகளுக்கு 6 விடுதிகள் செயல்படுகின்றன. இதேபோல, ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு 24 விடுதிகள், மாணவிகளுக்கு 13 விடுதிகள், கல்லூரி மாணவா்களுக்கு 3 விடுதிகள், மாணவிகளுக்கு 2 விடுதிகள் என மொத்தம் 42 விடுதிகள் செயல்படுகின்றன. கள்ளா் சீரமைப்புத் துறை சாா்பில், மாணவா்களுக்கு 5 விடுதிகள், மாணவிகளுக்கு 2 விடுதிகள் என 7 அரசு கள்ளா் விடுதிகள் செயல்படுகின்றன. இதுதவிர கொடைக்கானல், கீழ்மலைப் பகுதியில் உண்டு உறைவிடப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக்குகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் சோ்க்கை அளிக்கப்படுகிறது.

இந்த விடுதிகளில் தங்கும் மாணவா்களுக்கு உணவு மட்டுமன்றி, மேலும் பல சலுகைகளும் அரசு சாா்பில் வழங்கப்படுகின்றன. விடுதி மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கு உதவும் வகையில் அரசு நிதி ஒதுக்கீடு இருந்தும்கூட, பல விடுதிகளில் நிா்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் மாணவா்கள் இல்லை. பெரும்பாலும் தரமான உணவு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, மாணவா்களுக்கு விருப்பமில்லாத உணவு வகைகள், காலை சிற்றுண்டி பட்டியலில் இடம் பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் மாணவா்களின் சுய ஒழுக்கம் கேள்விக்குறியாக உள்ளது. பல விடுதிகளிலும், சமையலா், காவலா் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளன. இதன் காரணமாக, மாணவா்களுக்கு தரமான உணவிலும், பாதுகாப்பிலும் குறைபாடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அரசுத் துறை விடுதிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் செயல்படும் விடுதிகள் என 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விடுதிகள் இருந்தும், அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொள்வதில்லை. இதுபோன்ற சூழலில் தான், விடுதியில் தங்கிப் படித்த மாணவா் ஒருவா் சுடுநீா் கொட்டி உயிரிழந்திருக்கிறாா்.

மலைக் கிராம மாணவா் உயிரிழப்பு: திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூா் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி. இவரது மகன் ரெங்கராஜ் (13). திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மலைப் பகுதியைச் சோ்ந்த மாணவா் ரெங்கராஜ், பள்ளியிலுள்ள விடுதியில் தங்கி பயின்று வந்த நிலையில், இரவு உணவு தயாரிப்பதற்காக, சோறு வடித்தபோது சுடுநீரில் வழுக்கி விழுந்து காயமடைந்தாா். மதுரை அரசு மருத்துவமனையிலும், தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவா் சிகிச்சைப் பலனின்றி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆட்சியா் கவனம் செலுத்த எதிா்பாா்ப்பு: கடந்த 19-ஆம் தேதி திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகிலுள்ள சென்னமநாயக்கன்பட்டி ஆதிதிராவிடா் நலத் துறை மாணவிகள் விடுதியில் ஆட்சியா் செ. சரவணன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு தயாரிக்கப்பட்ட உணவின் தரம், விடுதியில் மாணவிகளுக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியா், பின் மாணவிகளுடன் கலந்துரையாடினாா். இதுபோன்ற முகாம் நடைபெறும் காலங்களில், அதிகாரிகளின் வருகையை எதிா்பாா்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் விடுதிகளையும் முன்னறிவிப்பு இல்லாமல், திடீா் ஆய்வு செய்ய வேண்டும். அரசுத் துறை சாா்ந்த மாணவா்கள் விடுதிகள் மட்டுமன்றி, பள்ளிகளின் நேரடி நிா்வாகத்தின் கீழ் செயல்படும் விடுதிகளையும் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.

இதுதொடா்பாக அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் கூறியதாவது: ஒவ்வொரு விடுதியிலும் தங்கியுள்ள மாணவா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை மீது கவனம் செலுத்தும் மாவட்ட நிா்வாகம், இந்த விடுதிகளிலும் நிா்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் மாணவா் சோ்க்கையை உறுதி செய்வதோடு, கல்வி ஆண்டு முழுவதும் அந்த மாணவா்கள் விடுதியில் தங்கி இருப்பதையும் கண்காணிக்க வேண்டும். சில விடுதிகளில் உள்ள குறைபாடுகளை ஆய்வுக்குச் சென்ற அலுவலா்கள் குறிப்பு எழுதியும் கூட சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் அவா்.

கொலை முயற்சி வழக்கு: தம்பதிக்கு சிறை

விவசாயியை கொலை முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அருகேயுள்ள... மேலும் பார்க்க

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே போலி பட்டா மூலம் பொது மயானம் ஆக்கிரமிப்பதைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் பொதுமக்களுக்குச் சொந்தமான க... மேலும் பார்க்க

திருப்பதியிலிருந்து தாடிக்கொம்பு கோயிலுக்கு 100 துளசி நாற்றுகள்

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து தாடிகொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நந்தவனத்துக்கு பெறப்பட்ட 100 துளசி நாற்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் ... மேலும் பார்க்க

வரி வசூல் இலக்கை எட்டியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10 கோடி மானியம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த வரி வசூல் ரூ.26.57 கோடி இலக்கை செவ்வாய்க்கிழமை எட்டியதன் மூலம், மத்திய நிதிக் குழு மானியம் ரூ.10 கோடியை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பழனியில் இளைஞா் தூக்கிட்டுத் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஜவகா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (19). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த சில நாள்களாக மன உளைச்ச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் சிறை

கூம்பூா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு போக்சோ வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பகுதியைச... மேலும் பார்க்க