செய்திகள் :

"அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் SC, ST, சிறுபான்மையினர் ஒருவர் கூட இல்லை" - சு.வெங்கடேசன்

post image

அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "அரசு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைவர்களில் எத்தனைப் பேர் பட்டியல் சாதி, பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் என்ற கேள்வியை (எண். 2469/04.08.2025) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரிடம் எழுப்பி இருந்தேன். அதற்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரி அளித்துள்ள பதில் பேரதிர்ச்சியைத் தருகிறது.

பங்கஜ் சௌதுரி
பங்கஜ் சௌதுரி

பிரதிநிதித்துவம் பாதாளத்தில்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தமுள்ள 9 தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்களில் ஒருவர் கூட பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் இல்லை. பழங்குடியினர் இல்லை. பெண்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் இயக்குநரவை குறித்துத் தரப்பட்டுள்ள விவரங்களும் இப்படித்தான் உள்ளன. மொத்தமுள்ள 98 இயக்குநர்களில் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள் 6 பேர். பழங்குடியினர், சிறுபான்மையினர் தலா ஒருவர். பெண்கள் எண்ணிக்கை 12 பேர். மக்கள் தொகை சதவீதத்திற்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்தான்.

அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

எல்.ஐ.சியின் இயக்குநரவையில் மொத்தமுள்ள 13 பேரில் பட்டியல் சாதியினர், சிறுபான்மையினர் எவருமே இல்லை. ஒரே ஒருவர் பழங்குடியினர். ஒரே ஒரு பெண். எல்.ஐ.சியின் தலைவர் பொறுப்பில் உள்ளவரும் மேற்கண்ட பிரிவினைச் சேர்ந்தவர் இல்லை.

அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இயக்குநரவையில் மொத்தமுள்ள 48 பேரில் பட்டியல் சாதியினர் 5 பேர் மட்டுமே. சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 18 பேர் பெண்கள்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் 6 பேரில் பட்டியல் சாதியினர் ஒருவர். சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 3 பேர் பெண்கள்.

சாதிய பாரபட்சம்

அமைச்சரின் பதில் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. சாதிப் பாகுபாடுகளின் வெளிப்பாடே. இட ஒதுக்கீடு இல்லாத பதவிகளில் எந்த அளவுக்குப் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது சாட்சியம். அரசு நிறுவனங்களின் கதியே இதுவென்றால் தனியார் நிறுவனங்களில் எல்லாம் என்ன நிலைமை இருக்கும்" என்று சு.வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

PMK: "என் எதிரிகளை விட அசிங்கமான வேலையைச் செய்கிறார்" - அன்புமணியுடனான பிரச்னையை விவரிக்கும் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகம் விவகாரத்தில் பல மாதங்களாக மோதல் நிலவிவருகிறது.இத்தகைய சூழலில் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஐயா என்று அழைத்த... மேலும் பார்க்க

'மோதிக்கொள்ளும் இலைக் கட்சிப் புள்ளிகள்!' டு 'இனிஷியல் தலைவருக்கு வந்த கவலை' | கழுகார்

மோதிக்கொள்ளும் இலைக் கட்சிப் புள்ளிகள்!கோஷ்டிப்பூசலில் 'மேடான' தொகுதி...மான்செஸ்டர் மாவட்டத்தில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலைக் கட்சி வாகைசூடிய ஒரு தொகுதி இருக்கிறது. அந்தத் தொகுதியில் மூன... மேலும் பார்க்க

``பெரிய தொகை தான்; ஆனாலும், விவசாய நலன் காக்க கட்டத் தயார்'' - ட்ரம்ப் வரி குறித்து பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளார். இது இந்திய ஏற்றுமதிகளைப் பெரியளவில் பாதிக்கும். இப்படி பாதிக்கப்படும் துறைகளில் ஜவுளித்துறை, விவசாயத்துறை, எலக்ட்ரானிக்ஸ் துறைகளும... மேலும் பார்க்க

DMK: கலைஞரின் 7-வது நினைவுநாள்; மலர் தூவி அஞ்­சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்! |Photo Album

"Legal Opinion கேட்டிருக்கிறோம்; பார்ப்போம்!" - கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் சொன்னதென்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3K... மேலும் பார்க்க

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபுணர் விளக்கம்

நேற்று இந்தியா மீதான வரியை இரட்டிப்பாக்கி அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதாவது, இந்தியா மீதான வரி 50 சதவிகிதம் என அமலுக்கு வர இருக்கிறது. ட்ரம்பின் வரி குறித்து விளக்குகிறார் பங்குச்சந்தை ந... மேலும் பார்க்க