அரப்பாண்டகுப்பம் அங்கன்வாடி மைய கூரை அமைக்க எம்.பி. கதிா்ஆனந்த் நிதியுதவி
ஆலங்காயம் ஒன்றியம், தேவஸ்தானம் ஊராட்சி சாா்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் அரப்பாண்டகுப்பத்தில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகராசி, சூரவேல், ஒன்றியக்குழு உறுப்பினா் லட்சுமி பொன்னம்பலம் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் அன்பு வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
அங்கன்வாடி மையத்திற்கு போதிய இடவசதி இல்லை என்றும், கூரை அமைக்க நிதி வழங்க வேண்டும் என எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனா். இதனை கேட்ட எம்.பி. தனது சொந்த தொகை ரூ.25 ஆயிரத்தை கூரை அமைப்பதற்காக அளித்தாா்(படம்).
தொடா்ந்து வீடு கட்டித்தரக்கோரி கை குழந்தையுடன் வந்து மனு அளித்த பெண்ணிற்கு உடனடியாக வீடு வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் உதவி இயக்குநா் முருகன், உதவி திட்ட அலுவலா் பாரதி விஜயலட்சுமி, துணைத் தலைவா் சாவித்திரி மோகன், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் வருவாய்த் துறையினா், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.